News Just In

3/08/2025 04:03:00 PM

சர்வதேச மகளிர் தினத்தில்; இலங்கையின் முதல் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா சாரிக் காரியப்பருக்கு சாய்ந்தமருதில் கௌரவம்!

சர்வதேச மகளிர் தினத்தில்; இலங்கையின் முதல் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா சாரிக் காரியப்பருக்கு சாய்ந்தமருதில் கௌரவம்!


நூருல் ஹுதா உமர்

பெண்களை போற்றும் விதமாகவும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலகம், சமுர்த்தி வங்கி சங்கம் மற்றும் சமூக அபிவிருத்திப் பிரிவு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 202.5.03.08 ஆம் திகதி சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி சங்கத்தின் திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா தலைமையில் இடம்பெற்றது.

பெண்களுக்கான உரிமைகள், பாலின பாகுபாடு இல்லாத சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் கிடைத்திட சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டிய விழிப்புணர்வை சர்வதேச மகளிர் தினம் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கான விதை 1908ல் போடப்பட்டது.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் கலந்து கொண்டிருந்தார். சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பொறுப்பு முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா, சமுர்த்தி வங்கியின் சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜௌபர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் (CBO,s) ஏ.எவ். றிகாஷா ஷர்பீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது வளவாளர்களால் சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் மகளிரின் வகிபாகம் தொடர்பில் பல்வேறு தலைப்புக்களில் செயலமர்வுகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வின்போது இலங்கையின் முதல் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்க தலைவி ஆரிக்கா சாரிக் காரியப்பருக்கு கௌரவமளிக்கப்பட்டது.

No comments: