யாழ். பதில் கட்டளைத் தளபதி உடனடியாக இடமாற்றம் !
யாழ். தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் கட்டளைத் தளபதியின் மகன், தந்தையின் பெயரை கூறி 20,000 ரூபாய் இலஞ்சம் வாங்கியதற்காக உடனடியாக தந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியவர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்ததையடுத்து, அவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 9 மாத காலத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர், குறித்த பதில் கட்டளைத் தளபதியின் மகன் தந்தைக்கு தகவல் தெரிவித்து வழக்குப் போடுவதைத் தடுப்பதாகக் கூறி சாரதியிடம் இருந்து 20,000 ரூபா இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சாரதி, சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி முறைப்பாட்டின் பேரில் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்தும் பதில் நிலைய கட்டளைத் தளபதி தனது மகன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், உடனடியாக சம்பந்தப்பட்ட பதில் நிலைய கட்டளைத் தளபதியை முல்லைத்தீவு பகுதிக்கு சனிக்கிழமை (08) இடமாற்றம் செய்துள்ளார்.
3/10/2025 10:31:00 AM
யாழ். பதில் கட்டளைத் தளபதி உடனடியாக இடமாற்றம் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: