News Just In

3/09/2025 03:42:00 PM

க.பொ. த சாதாரண தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!

க.பொ. த சாதாரண தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு



கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (G.C.E O/L) அனைத்து பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 26 ஆம் திகதி நிறைவடைய உள்ளது.

No comments: