மட்டக்களப்பில் மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை
மட்டக்களப்பில் மீண்டும் பொலிஸார் குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான விண்ணப்பப் படிவங்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை இன்று (08) ஆரம்பித்துள்ளதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் அச்சம் தொற்றியுள்ளது.
1865ஆம் ஆண்டு 16ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76ஆம் பிரிவிற்கமைய வீடுகளில் குடியிருப்பாளர்கள் மற்றும் தங்கி இருப்போரின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்கான தலைப்பிலான இந்த விண்ணப்பபடிவம் மட்டக்களப்பு நகரிலுள்ள பகுதிகளில் வீடுவீடாக பொலிசார் சென்று வழங்கி வருகின்றனர்.
இந்த பொலிஸ் பதிவு மீண்டும் ஆரம்பித்ததையடுத்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தொற்றியுள்ளதுடன் கடந்த 2016ஆம் ஆண்டுகிக்கு பிற்பாடு மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3/08/2025 04:34:00 PM
மட்டக்களப்பில் மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: