News Just In

3/27/2025 11:17:00 AM

இன்று இடம்பெற்ற கோரவிபத்து; பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

இன்று இடம்பெற்ற கோரவிபத்து; பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

இன்று காலை (27) ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் லொறி உதவியாளர் மாணவர்கள் சிலர்

காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த லொறி உதவியாளர் உட்பட பாடசாலை மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் , இங்கிரிய நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய லொறியும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

No comments: