News Just In

2/14/2025 03:08:00 PM

கரடியனாறு பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!

கரடியனாறு பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!



கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கொல்ல பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 02 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 29 வயதுடைய கோம்பாவில் மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: