கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் தாறுஸ்ஸபா குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான இலவச குர்ஆன் பிரதிகளை வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் 2025 ஜனவரி 30 வியாழக்கிழமை தாறுஸ்ஸபா தலைமையகத்தில் தாறுஸ்ஸபா அமையத்தின் பிரதானி உஸ்தாத் சபா முஹம்மத் நஜாஹி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தஜ்வீத் குர்ஆன் பிரதிகளை வழங்கி வைத்தார். மேலும் கௌரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சமுக சேவைகள் உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்சன், கல்முனை கிராம சேவகர் எம்.ஏ.றஹ்னா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.றிப்கா ஜெஸ்மின் உட்பட கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments: