News Just In

2/20/2025 02:43:00 PM

சுட்டுக் கொல்லப்பட்ட “கணேமுல்ல சஞ்சீவ”வின் சடலத்தை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை!

சுட்டுக் கொல்லப்பட்ட “கணேமுல்ல சஞ்சீவ”வின் சடலத்தை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை!


கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் புதன்கிழமை (19) சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வின் சடலத்தை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை என வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவவின் மனைவியும் அவரது சடலத்தை பொறுப்பேற்று கொண்டுசெல்ல முன்வரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், கணேமுல்ல சஞ்சீவவின் சடலம் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வாழைத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments: