News Just In

2/26/2025 06:11:00 AM

மக்களை தாக்கிய AI ரோபோ: சீனாவில் பரபரப்பு!

மக்களை தாக்கிய AI ரோபோ: சீனாவில் பரபரப்பு



சீனாவில் (China) செயற்கை நுண்ணறிவியல் (Artificial intelligence) தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது.

மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் AIயினால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ ஒன்று திடீரென மக்களை தாக்கியுள்ளது.

இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தடுத்துள்ள போதிலும் அங்கு பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் பதிவான காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மென்பொருள் கோளாறே இந்த ஒழுங்கற்ற நடத்தைக்குக் காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் இதனால் எந்தவொரு திட்டமிட்ட தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

குறித்த AI ரோபோவினை ஒபரேட்டரையே தாக்க முற்பட்டதாக கூறப்படுகின்ற அதேவேளை, தற்போதைய தொழில்நுட்ப சூழலில் AI குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தலை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பேசப்படுகின்றது.

No comments: