News Just In

1/09/2025 04:51:00 PM

இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பில் கையளிப்பு!

இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பில் கையளிப்பு





(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சமீபத்திய சீரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் 750 உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

“இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்” எனும் தலைப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த உலருணவுப் பொதிகளை மாவட்டச் செயலக அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தியா இலங்கை 75 வருட ஆண்டு கால இராஜதந்திர உறவை முன்னிட்டு இவை வழங்கப்பட்டள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: