பாசிக்குடா கடற்கரையில் வெளிநாட்டு பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு !
பாசிக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் இன்று (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்யா நாட்டவர் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பாசிக்குடா சுற்றுலா விடுதியொன்றில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கி இருந்துள்ளனர்.
அக்குடும்பத்தினர் இன்று காலை 7.30 மணியளவில் பாசிக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது 64 வயதுடைய ரஷ்யா நாட்டுப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
1/10/2025 05:47:00 PM
பாசிக்குடா கடற்கரையில் வெளிநாட்டு பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: