News Just In

1/18/2025 04:35:00 PM

விடுகை விழா!

விடுகை விழா!


அபு அலா, எஸ்.எம்.முபீன்
திருகோணமலை - கோபாலபுரம் பாலர் பாடசாலையின் 38வது ஆண்டு விடுகை விழாவும், பரிசளிப்பும் கோபாலபுரம் தமிழ் வித்தியாலய மண்டபத்தில் (17) இடம்பெற்றது.

பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியை பவள ராசா சாந்தி தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்குகுச்சவெளி பிரதேச சபை செயலாளர் வெளிண்டன் இந்திரஜி பிரதம அதிதியாகவும், கோபாலபுரம் வருமான பரிசோதகர் கதிரவேல் லிங்கேஸ்வரர் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது பாடசாலை சிறார்களினால் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்று. இதில் பங்குபற்றி சிறார்களுக்கும், விடுகை பெற்றுச் செல்லும் சிறார்களுக்கும் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments: