News Just In

1/21/2025 11:46:00 AM

வெள்ளம் பாய்ந்தோடும் மாவடிப்பள்ளியில் கண்காணிப்பு தீவிரம் !

வெள்ளம் பாய்ந்தோடும் மாவடிப்பள்ளியில் கண்காணிப்பு தீவிரம் 


நூருல் ஹுதா உமர்

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வெள்ள நீரை கட்டுப்படுத்த அணைக்கட்டுகளை திறந்தமையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நீர்மட்டம் உயர்ந்து செல்வதனால் அதனை கண்காணிப்பு செய்வதற்காகவும் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிப்பு செய்வதற்காகவும் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணனின் வழிகாட்டுதல் மற்றும் பணிப்புரைக்கு அமைய அனர்த்த முகாமைத்துவ குழு ஒன்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் சேர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். பொதுமக்கள் நலன் கருதி இவ்வாறான முன்னாயத்த செயற்பாடுகளை பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படிருப்பது பாராட்டத்தக்க விடயமாகும். கடந்த மாதம் இந்த பிரதேசத்தில் எட்டு பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்த துயர சம்பவம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: