
ஹபரணை - மின்னேரியா வீதியில் 07 ஆவது மைல்கல் அருகில் இன்று புதன்கிழமை (29) காலை இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, இ.போ.ச பஸ்ஸில் பயணித்த 12 பேரும் தனியார் பஸ்ஸில் பயணித்த நால்வரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் ஹபரணை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் இரு பஸ்களின் சாரதிகளும் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தனியார் பஸ்ஸானது கட்டுநாயக்கா பிரதேசத்தில் இருந்து சிறிபுர பிரதேசத்திற்கு மரணச்சடங்கு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: