News Just In

12/24/2024 05:36:00 PM

அனர்த்த முன்னாயத்தங்களை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல்!

அனர்த்த முன்னாயத்தங்களை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல்



நூருல் ஹுதா உமர்

அனர்த்த முன்னாயத்தங்களை மேற்கொள்ளல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் தலைமையில் திங்கட்கிழமை கிழமை காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த இக்கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.சி.எம்.றியாஸ் அவர்களினால் அனர்த்த முன்னாயத்தங்களை மேற்கொள்ளல் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அனர்த்த முகாமைத்துவ குழுக்களை திறமையாக செயல்பட வைத்தல் போன்ற அனர்த்த ஆபத்துக்களை குறைத்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்த இக்கலந்துரையாடலில் காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி பிரிவு தலைமை பீட முகாமையாளர் ஏ.எம்.அச்சு முஹமட் , கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments: