News Just In

12/01/2024 02:50:00 PM

எரிபொருள் விலை திருத்தம்! பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

எரிபொருள் விலை திருத்தம்! பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பான முக்கிய அறிவிப்பு



எரிபொருளின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று தேசிய போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, தனியார் பேருந்து கட்டணத்திலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன(Gemunu Wijeratna) தெரிவித்துள்ளார்.

அத்துடன், முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைப்பதற்கு, பெட்ரோலின் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் போதாது என்று அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திருத்தம் மேற்கொண்டிருந்தது.


இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 309 ரூபாவாகும்.



ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.

அத்துடன், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 188 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

No comments: