எருவில் கிராமத்தில் சாணக்கியனுக்கு அமோக வரவேற்பு உள்ளூராட்சி வேட்பாளரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.
இன்றைய தினம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட எருவில் கிராமத்தில் தமிழரசுக் கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமோக வெற்றி பெற்ற இரா சாணக்கியன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ் நிகழ்வானது தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி வேட்பாளர் வசீகரனின் தலைமையில் சிறப்பாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பான ஆரம்ப புள்ளியாகவும் இவ் நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments: