News Just In

12/10/2024 12:44:00 PM

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம மக்களுக்கு இலவச நடமாடும் மருத்துவ முகாம்!


சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம மக்களுக்கு இலவச நடமாடும் மருத்துவ முகாம்


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம மக்களுக்கு இலவச நடமாடும் மருத்துவ முகாம் திங்கட்கிழமை சாய்ந்தமருது பல்நோக்கு கட்டிடத்தில் இடம்பெற்றது.

Kandy wings of humanity அமைப்பின் அனுசரணையுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜி சுகுணன் மற்றும் வைத்திய குழாமினர் கலந்து கொண்டனர். மேலும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வொலிவேரியன் கிராமத்துக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments: