தமிழரசின் குரலாய் இன்றையதினம் பாராளுமன்றத்தில்...!. இந்த சபையில் முதலாவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திங்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில், வரலாற்றில் முதல் முறையாக 159 ஆசனங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்களை இவ்விடத்தில் தெரிவித்தக் கொள்கிறேன். அதேபோன்று தான் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய எமது கட்சிக்கும் மட்டக்களப்பிலே மக்கள் ஆணை மீண்டும் ஒரு முறை கிடைத்திருக்கிறது. ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. மட்டக்களப்பிலும் எம்முடைய மக்கள் ஒரு வரலாற்று சாதனையை தேசிய மக்கள் சக்திக்கு நாடு முழுவதும் எப்படி 159 ஆசனங்கள் கிடைத்ததோ, அதே போன்று மட்டக்களப்பிலே வரலாற்றிலேயே இந்த விருப்பு வாக்கு முறையின் கீழ் அதி கூடிய விருப்பு வாக்குகளை 65 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளை எனக்கு தந்து மட்டக்களப்பு மக்களும், நாடு முழுவதும் அநுர அலை, அநுரவினுடைய சுனாமி அடிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் அந்த சுனாமியை நின்று பிடித்து அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று அதிகூடிய ஆசனங்களை பெற்றிருந்தோம். நாட்டிலே ஜனாதிபதியினுடைய அண்மையில் நடைபெற்றிருந்த உரை தொடர்பான இந்த விவாதத்திலே நாட்டிலே சமத்துவம் என்பது முக்கியம். நாட்டிலே சமத்துவம் என்பதை வரவேற்கிறோம். ஆனால் ஜனாதிபதியின் உரையிலே தமிழ் மக்களுக்கு மாத்திரம் உரித்தான சில பிரச்சினைகள் குறித்து அவர் கூறவில்லை. அந்த விடயங்களை பற்றி இந்த சபையிலே கூறலாம் என்ற எண்ணுகின்றேன். ஏனெனில் மீண்டும் ஒரு முறை இலங்கை தமிழரசு கட்சி வடக்கு கிழக்கின் தமிழ் மக்களுடைய பிரதானமான கட்சி அங்கீகாரத்துடன் தமிழ் மக்கள் சார்பில் அப்பிரச்சிளைகளை கூற நினைக்கிறேன். மிக முக்கியமாக தமிழ் அரசியல் கைதிகள். அரசியல் காரணங்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடிய இந்த அரசியல் கைதிகள் இன்றும் விடுதலை செய்யப்படாத நிலையிலே சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் ஆரம்பத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்று பல்வேறு வழக்குகளின் கீழ் இருக்கிறார்கள். இந்த விடயம் குறித்து கருத்தில் கொள்ளுமாறு நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்நாட்டிலுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று காலை துரதிஷ்டவசமாக நாமல் அமரசிங்க என்பவர் வரைந்த கேலிச்சித்திரம் ஒன்றை நான் பார்த்தேன். அதில் PTA பயங்கரவாத தடுப்பு சட்டம் என்பது ‘பவர் டு அநுர’’ (அநுரவிற்கான பலம்) என சித்தரிக்கப்பட்டுள்ளது. பொது அரங்கில் இவ்வாறான விடயங்கள் நிகழ்வதை நாம் விரும்பவில்லை. PTA என்பது ஜே.வி.பி. அல்லது தேசிய மக்கள் சக்தி இனால் கூட இரத்து செய்ய ஒப்புகொள்ளளப்பட்டது. பங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்வதற்கான நாடளாவிய ரீதியிலான கையெழுத்து பிரசாரத்தில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் எம்முடன் இணைந்த கொண்டிருந்தனர். ஆனால் உங்களது அரசாங்கத்தின் கீழும் இந்த பயங்கரவாத தடை சட்டம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கம் இவ்வாறான விடயங்களினால் தாக்கப்படக் கூடாது என்பதற்காகவே நான் இவ்விடயத்தை கூறுகின்றேன்.
பங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். விசாரணைகள் மட்டுமல்ல, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நாம் தொடர்ச்சியா குறிப்பிட்டு வரும் வரும் விடயம் விசாரணைகள் மட்டுமல்ல, உண்மைகள் கண்டறியப்படுவது மாத்திரம் அன்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
கடந்த அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவை முன்மொழிந்தது. நீங்கள் இதை முன்னெடுத்து செல்கின்றீர்களா இல்லையான என்பது எனக்கு தெரியாது. ஆனால் பொறுப்புகூறல் விடயத்தில் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நடைமுறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஜெனீவா அமர்வுகள், ஐக்கிய நாடுகள் சபை இதனை முன்னெடுத்து செல்லும். ஆனால் இது தொடர்பிலான அரசாங்கத்தின நிலைப்பாடு என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மனித இனத்திற்கு எதிராக குற்றம் புரிந்தவர்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பிலான தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை நாம் அறிய விரும்புகிறோம். இவை பிரச்சினைகள் அல்ல. தேசிய மக்கள் சக்தி , ஜேவி.பி-க்கு இது பழக்கப்பட்ட விடயமாகும். ஏனெனில் நீங்களும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள். எனவே இது குறித்த அரசாங்கத்தின் நிலைபாட்டை நாம் அறிய விரும்புகிறோம்.
மேலும், காணி சம்பந்தமான விடயங்களில் தமிழ் மக்களுக்கு அதிகமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த பிரச்சினை சமத்துவம் என்ற அடிப்படையில் சிங்கள மக்களுக்கு இல்லாத இந்த பிரச்சினை தமிழ் மக்களுக்கு இருக்கிறது. மிக முக்கியமாக காணி பிரச்சினைகள் சம்பந்தமாக மகாவலி அதிகாரசபையினுடைய பிரச்சினை வடக்கு கிழக்கிலே எட்டு மாவட்டங்களிலும் இருக்கின்றது. இந்த மகாவலி அதிகாரசபையினுடைய பிரச்சினை முல்லைத்தீவாக இருக்கட்டும், வவுனியா, திருகோணமலை என எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்றது. இந்த பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் அறிய விரும்புகிறோம்.
அதேபோன்றுதான் தொல்பொருள் திணைக்களத்தினால் இந்த நாட்டிலே சிங்கள மக்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இந்த தொல்பொருள் சட்டத்தின் கீழ் பாதிக்கப்படுகின்றனர். அந்தவகையில் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, மட்டக்களப்பு குசலானமலை உள்ளிட்ட பிரதேசங்களின் இந்த தொல்பொருள் திணைக்கள பிரச்சினை குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
அதேபோன்று தான் வன நிலப் பிரச்சினை. இலங்கையின் கிடைக்கத்தக்க நிலப்பரப்பு தொடர்பில் 1983ஆம் ஆண்டின் வரைவு படத்திற்கு செல்வதாக கடந்த ஜனாதிபதி கூறினார். அவ்வாறு செல்லும் பட்சத்தில் சில வன நிலப் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம். இது தொடர்பிலும் அரசாங்கத்தின் நிலைபாட்டை அறிய விரும்புகிறோம். வன நிலப் பிரச்சினை என்பது வடக்கு கிழக்கில் முகங்கொடுக்கும் பாரிய பிரச்சினையாகும்.
மேலும், பல நிர்வாகப் பிரச்சினைகள். எமது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினை. இது நிர்வாக ரீதியான பிரச்சினை. இது தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினை. அரசாங்கம் இதற்கான தீர்வினை வழங்க வேண்டும். ஏனெனில், அரசாங்க கட்சிக்கு தமிழ் மக்களுடைய வாக்குகள் கிடைத்திருக்கின்றது. அந்தவகையில் இவ்விடயம் தொடர்பிலும் அரசாங்கத்தின் நிலைபாட்டை அறிய வேண்டும்.
அதேபோன்றுதான் இராணுவ முகாம்களை அகற்றுதல். சில இராணுவ முகாம்கள் மற்றும் வீதி தடைகளை அகற்றுவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்னைய அரசாங்கங்கள் இதனை செய்திருக்க வேண்டும். சில கோயில்களுக்கு தமிழ் மக்களுக்கு செல்ல முடியாதிருந்தது. ஆனால் தற்போது செல்ல முடிகிறது. அதற்கு நன்றிகள். அரசாங்கத்தின் முனமுயற்சிகளை பாராட்டுகிறோம். அரச காணிகள், அரச பாடசாலைகள் என்பனவே ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ முகாம்களாக காணப்படுகின்றன. எனவே இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்;தை வலியுறுத்துகிறோம்.
இறுதியாக மற்றுமொரு முக்கியமான விடயம் இந்நாட்டின் அதிகாரப் பகிர்வு. ஜே.வி.பி. செயலாளர்நாயகம் ரில்வின் சில்வாவின் அறிக்கை தொடர்பிலான எனது கேள்விக்கு கலாநிதி. நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியிருந்தார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாகாண சபை முறைமை குறித்த புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவரும்போது, நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். இந்நாட்டின் தமிழ் மக்கள் நாங்களும் மக்களே. மக்களுக்கு அரசியல் உரிமை உண்டு. வடக்கு கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்களின் சதவீதம் 1200 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. சுதந்திரம் பெற்றதிலிருந்து அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்களின் சதவீதம் 1200 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் 200 சதவீதம் மாத்திரமே அதிகரித்துள்ளது. திருகோணமலையில் 700 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் சிங்கள மக்களின் தொகை 200 சதவீதத்தினால் மாத்திரமே அதிகரித்துள்ளது.
அதாவது கடந்த 75 ஆண்டுகளுக்கான அரச அனுசரணையுடனான குடியேற்ற திட்டங்கள் வடக்கு கிழக்கின் ஜனநாயகத்தை மாற்றியுள்ளது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற் உரிமை இல்லை என கூறுவதற்கு எந்தவொரு அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை. எனவே எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்புகளை உருவாக்கும் போது இந்த நாட்டின் சமமான அரசியல் அதிகாரத்திற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றைய எண்ணிக்கையின் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களை அங்கீகரிக்காத வகையில் நீங்கள் அமைப்பை மாற்றினால், உங்களுக்கும் எதிர்விளைவுகள் சந்திக்க நேரிடும்.
நாம் இந்த அரசாங்கத்தை மாற்றுவதோ அரசாங்கத்தை நாசமாக்குவதோ அல்லது அரசாங்கத்திற்கு இடையூறு விளைவிப்பதோ எமது நோக்கமல்ல. அரசாங்கத்தின் குறிக்கோள்களுக்கு நாம் துணை நிற்பொம். ஆனால் எமது பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாம் ஆவலும் எதிர்பார்த்திருக்கிறோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்புண்டு. பிள்ளையானிடம் விசாரணை நடத்தினர். கைது செய்யுமாறு எமக்கு கூற முடியாது. ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்கள் எம்மிடம் உண்டு. இது குறித்து பாதுகாப்பு செயலாளருக்கும் நான் குறிப்பிட்டுள்ளேன். எமக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள். நாம் ஒரு குழுவை இணைத்து தருகிறோம். இன்னும் சாட்சிகளை உருவாக்க முடியும். இதனை செய்யுங்கள். அதேபோன்று இலஞ்ச ஊழல்களை இல்லாது ஒழியுங்கள். பிள்ளையான் மற்றும் அந்த அரசாங்கம் மேற்கொண்ட 32 காரணிகளை நான் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் வழங்கினேன். ஆனால் எதுவும் செய்யவில்லை. எம்மிடம் தகவல்கள் உள்ளன. தற்போதைய பிரதமர், ஜனாதிபதி எம்மிடம் தகவல்களை பெற்றுத் தருகிறோம். மக்கள் இவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 159 பெரும்பான்மை ஆசனங்களை கொண்ட அரசாங்கத்தை பயன்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே நாமும் முயற்சிக்கிறோம். அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சிக்கு வர நாம் முயற்சிக்கவில்லை. எமது கட்சி ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி அல்ல.
மேலும் மதுபானசாலை அனுமதிப்பத்திரம். வடக்கிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் இருக்கிறது என கூறினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் பகிரங்கமாக அதனை ஒப்புகொண்டார். ஏன் அதன்; எஞ்சிய பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. மதுபானசாலை அனுமதிப்பத்திரம் குறித்து தகவல்கள் உள்ளதாக குறிப்பிட்டனர். அது குறித்து விசாரணை நடத்துங்கள். மதுபானசாலை அனுமதிப்பத்திரம் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏன் இவற்றை வெளியிடுவதில்லை. இலஞ்ச ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் நாம் அதற்கு ஒத்துழைக்க தயார். எமக்கு மக்களே எதிர்க்கட்சி என குறிப்பிட்டிருந்தீர்கள். எனவே எதிர்க்கட்சியாக மக்கள் வீதிக்கு இறங்கும் முன்னர் நடவடிக்கைகளை முன்னெடுங்கள். நல்ல விடயங்களுக்கு எமது ஒத்துழைப்பு எப்போதும் காணப்படும் என கூறி விடைபெறுகிறேன்.

No comments: