மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான புதிய முன்மொழிவு வெள்ளிக்கிழமை சமர்ப்பிப்பு
மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவது பற்றி இலங்கை மின்சாரசபை தயாரித்துக் கொண்டிருக்கும் பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (டிசெம்பெர் 6) பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையைத் தயாரிக்கும் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் ஏ.டி.கே. பராக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
பிரேணையில் அடங்கியுள்ள யோசனைகளை ஆராய்ந்த பின்னர் மின்சாரக் கட்டணத்தை எத்தனை சதவீதத்தால் குறைக்கலாம் என்பதை ஆணைக்குழு தீர்மானிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு 2024 டிசெம்பெர் 06ஆம் திகதி வரை இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியிருந்தது.
மின்சாரக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள குறைந்தது 6 வாரங்களாவது தேவைப்படும் எனவும், அதற்கமைய இந்த வருடத்துக்குள் மின்கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
12/03/2024 12:54:00 PM
Home
/
Unlabelled
/
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான புதிய முன்மொழிவு வெள்ளிக்கிழமை சமர்ப்பிப்பு!
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான புதிய முன்மொழிவு வெள்ளிக்கிழமை சமர்ப்பிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: