News Just In

12/17/2024 06:10:00 AM

மாகாணசபை தேர்தல் தொடர்பில் அனுரா அரசின் முடிவு!

மாகாணசபை தேர்தல் தொடர்பில் அனுரா அரசின் முடிவு!




மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுகுவதற்கு நான்கு வகையான அணுகுமுறைகளைக் கையாள வேண்டுமென்று நாங்கள் கூறுகின்றோம்.

முதலாவது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாகவுள்ள பிரச்சினைகளாக வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, போதைவஸ்த்துப் பாவனை என்பன காணப்படுகின்றன.

முதலில் அந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான தீர்வை வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

ஆகவே இவற்றில் இருந்து நாம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இதுவரை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குக்கென தனித்தனியாக இருந்து வந்துள்ளது.

எனவே முதலாவதாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்

No comments: