குறைந்த காற்றழுத்த தாழ்வு : மீண்டும் பலத்த மழை - பொது மக்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இது டிசம்பர் 11 ஆம் திகதியளவில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை – தமிழக கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை நிலையும் மேற்குறிப்பிட்ட நிலையுடன் நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
12/08/2024 06:10:00 PM
குறைந்த காற்றழுத்த தாழ்வு : மீண்டும் பலத்த மழை - பொது மக்களுக்கு எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments: