News Just In

11/26/2024 11:55:00 AM

இந்திய விஜயத்தின் பின் சீனா செல்லும் ஜனாதிபதி அநுர - வந்தது அழைப்பு


இந்திய விஜயத்தின் பின் சீனா செல்லும் ஜனாதிபதி அநுர - வந்தது அழைப்பு



ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஜயம் மேற்கொள்ளும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள சீன தூதரகத்தில் இருந்து அவருக்கு சீனாவுக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது.

No comments: