News Just In

11/10/2024 07:34:00 PM

மட்டக்களப்பு முகத்துவாரத்தில், நீருடன் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன்!

மட்டக்களப்பு முகத்துவாரத்தில், நீருடன் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன்!





வெள்ள அனர்த்தத்தால் மட்டக்களப்பு மாவட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன், மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாய் வெட்டப்பட்டு, மேலதிக நீரை கடலுடன் இணைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இளைஞரொருவர் நீருடன் அடித்துச் செல்லப்பட்ட சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இளைஞனே நீருடன் அடித்துச் செல்லப்பட்டவராவர். ஆற்று நீர் கடலுடன் கலக்கும் இடத்தில், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை, எதிர்பாராத விதமாக நீரின் வேகம் அதிகரித்தமையே இவ் அனர்த்தத்திற்குக் காரணம் என கூறப்படுகின்றது.

முகத்துவாரப் பகுதியில் நின்ற சக மீனவர்கள் துரிதமாகச் செயற்பட்டு, நீரில், அடித்துச் செல்லப்பட்ட இளைஞனை மீட்ட காட்சிகள், எமது அலுவலகச் செய்தியாளரின் கமராக் கண்களுக்குள் சிக்கியிருந்தன.

No comments: