News Just In

11/02/2024 04:55:00 PM

மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்!

மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்




யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான தயார்ப்படுத்தல் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் இன்றைய தினம் (02) காலை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது பொதுச் சுடரேற்றி மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, அதன் பின்னர், சிரமதானப் பணிகள் நடைபெற்றன.

மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் இந்த சிரமதானப் பணிகளில் கலந்துகொண்டனர்.

No comments: