News Just In

11/14/2024 11:56:00 AM

மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் சிக்கி உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்தவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் பகுதியில் நடைபெற்ற மரண சடங்குக்குக் கடந்த 09 ஆம் திகதி வருகை தந்தவர் மறுநாள் மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் போது , கொக்காவில் பகுதியில் பன்றி ஒன்று வீதியின் குறுக்கே ஓடியதில் , அவர்கள் பயணித்த வாகனம் பன்றியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவரை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை (13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments: