
வவுனியா (Vavuniya) வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (Terrorism Investigation Division) விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் (Sasikumar) மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் (Thamilselvan)ஆகியோருக்கே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றையதினம் (09.11.2024) சனிக்கிழமை வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருமாறு குறித்த இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் தொலைபேசி அழைப்பு மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்
No comments: