News Just In

11/06/2024 07:11:00 AM

தேசிய அரசு அமைந்தால் அரசுக்கு ஆதரவளிப்போம்!

தேசிய அரசு அமைந்தால் அரசுக்கு ஆதரவளிப்போம்!


தேர்தல் பிரசார மேடைகளில் சுமந்திரனின் பெயரைத் தவிர்த்து முடிந்தால் ஏனைய கட்சிகள் உங்களது தேர்தல் பரப்புரைகளை செய்யுங்கள் பார்க்கலாம் என தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் சவால் விடுத்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு முதலில் வெளியேறியவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தான். இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து தீர்மானம் எடுத்த போது மேடையில் ஒன்றாய் இருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அதன் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றின் போது ஆசனப் பங்கீட்டின் போதே கட்சியை விட்டு வெளியேறினார். பொதுத் தேர்தலை அடுத்து தேசிய அரசு அமைந்தால் அரசுக்கு ஆதரவளிப்போம். ஆனால் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வோம். நல்லாட்சி போன்று.

சாள்ஸ் நிர்மலநாதன் பார் பார்மிட்டுக்கு கடிதம் கொடுத்தது உண்மையே எனவும் குடுத்த கடிதத்தை ஒழித்து வைத்துவிட்டு இப்போ முடிந்தால்க் காட்டுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுகிறார். அத்தோடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.

அது ஒன்றும் செய்யமுடியாது. அதனாலேயே அவர் தேர்தலிலில் இருந்து தானாக வெளியேறினார், விக்னேஸ்வரனும் போட்டியிடாது வெளியேறினார். அதே போல் வேறு சிலரும் உள்ளே இருக்கிறார்கள் அவர்களும் தாமாக வெளியேறனால் நல்லது என தெரிவித்தார்

No comments: