News Just In

11/08/2024 01:46:00 PM

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!



மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் , வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மற்றுமொரு நபருடன் இணைந்து உப்போடை பிரதேசத்தில் உள்ள வயலுக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments: