News Just In

11/06/2024 05:15:00 PM

பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் தண்டச் சோறுகளா? - புதிய தலைவருக்கு எதிராக வெடித்தது போராட்டம்..!


பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் தண்டச் சோறுகளா? - புதிய தலைவருக்கு எதிராக வெடித்தது போராட்டம்..!



பனை அபிவிருத்தி சபையின் ஊழியர்கள் தொடர்பில் தரக்குறைவாக கருத்து தெரிவித்த பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவருக்கு எதிராக யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

கைதடியிலுள்ள பனை அபிவிருத்தி சபையின் தலைமையகம் முன்பாக பனை அபிவிருத்தி சபையின் ஊழியர்களால் இன்று (06) மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் தண்டச் சோறுகளா? , வடக்கு மாகாணத்தின் வினைத்திறனான ஆளுநரே எமக்கு தீர்வு தாரும் , தகுந்த காரணமின்றி ஊழியர்களின் நிர்வாக பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்து, NPP அரசே தகுதியற்ற புதிய தலைவர் நியமனத்தை உடனடியாக ரத்துச் செய் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தியவாறு பல்வேறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: