
மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருகிறது.
பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் குறித்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
கார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுகின்றன.
அந்த வகையில் மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று கூடிய பெருமளவான மக்கள் உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி கண்ணீரால் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் மற்றும் இரா.சாணக்கியனும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



No comments: