News Just In

11/21/2024 12:52:00 PM

யாழில் 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்குள் அனுமதிக்கப்பட்ட மக்கள்!

யாழில் 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்குள் அனுமதிக்கப்பட்ட மக்கள்


யாழ்ப்பாணம் - பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு மக்கள் செல்ல நேற்று (20.11.2024) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (20) முதல் பலாலி, வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது

அத்துடன், இந்த ஆலயத்துக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதையூடாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: