மட்டக்களப்பு – ஏறாவூர் மீராகேணியில் புதிய பள்ளிவாசலொன்றை நிர்மாணிக்கும் கட்டுமான வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக மேற்படி பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் புதிய பள்ளிவாசல் ஒன்றை அமைத்துத் தர ஆவன செய்யுமாறு பிரதேச மக்கள், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதனடிப்படையில் அலிஸாஹிர் மௌலானாவின் முயற்சியினால் பெறப்பட்ட 25 இலட்ச ரூபா நிதியைக் கொண்டு அப்பள்ளிவாசலின் நிருமாண வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
“மஸ்ஜிதுல் ரஹ்மான்” எனும் மேற்படி புதிய பள்ளிவாசலின் கட்டுமான வேலைகளை அலிஸாஹிர் மௌலானா தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
No comments: