News Just In

11/19/2024 02:49:00 PM

ரயில் மோதி உயிரிழந்த 16 வயது மாணவன் - பொலிஸாருக்கு வந்த சந்தேகம்!

ரயில் மோதி உயிரிழந்த 16 வயது மாணவன் - பொலிஸாருக்கு வந்த சந்தேகம்




கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவன் கம்பஹா பஹலகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவன் ரயிலில் மோதி உயிரிழந்தாரா அல்லது ரயிலில் இருந்து குதித்து உயிரிழந்தாரா என்பது தொடர்பில் கம்பஹா தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனையை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கம்பஹா தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: