பூமிக்குத் திரும்பிய நான்கு விண்வெளி வீரர்கள்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நான்கு விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார்கள்.சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றிருந்த விண்வெளிவீரர்களில் நான்கு பேர், நேற்று பத்திரமாக அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரைக்கருகில் தரையிறங்கியுள்ளார்கள்.
எட்டு மாதங்கள் அவர்கள் விண்வெளி நிலையத்தில் செலவிட்ட நிலையில், நேற்று பூமிக்குத் திரும்பியுள்ளார்கள்.
நாசா விண்வெளி வீரர்களான Matthew Dominick, Michael Barratt மற்றும் Jeanette Epps, அவர்களுடன் ரஷ்ய விண்வெளி வீரரான Alexander Grebenkin ஆகியோர் எட்டு மாதங்களுக்குமுன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றிருந்தார்
இந்நிலையில், பூமிக்குத் திரும்பிய நான்கு பேரில் ஒருவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது தனியுரிமை கருதி, அவர் யார் என்பதோ, அவருக்கு என்ன பிரச்சினை என்பதோ வெளியிடப்படவில்லை.
அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது
10/26/2024 01:27:00 PM
பூமிக்குத் திரும்பிய நான்கு விண்வெளி வீரர்கள்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: