2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினகள் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகள் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் இரண்டு அறிக்கைகளில் ஒன்றில் உயிர்த்த ஞாயிறு குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காணப்படுகின்றன.
புதிய அறிக்கைகளில் அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது,முன்னைய அரசாங்கம் இந்த பரிந்துரைகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நாங்கள் இந்த இரண்டு அறிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை, தற்போதைய ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார், அவர் அதனை நிறைவேற்றுவாரா என கத்தோலிக்க திருச்சபை பார்த்துக்கொண்டிருக்கின்றது
No comments: