News Just In

10/17/2024 11:31:00 AM

கேள்விப்பத்திரத்தை பெறுவதற்காக பல மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்க முயன்றார்- சந்திரிகா

எனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒருவரின் கணவர் கேள்விப்பத்திரத்தை பெறுவதற்காக பல மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்க முயன்றார்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா




எனது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த பெண் ஒருவரின் கணவர் கேள்விப்பத்திரமொன்றை பெறுவதற்காக எனக்கு பல மில்லியன் டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெற விரும்பினால் அவர் ஒரு மில்லியன் டொலருடன் எங்களிடம் வருவார்.இந்த கேள்விப்பத்திரத்தை எனக்கு தாருங்கள் என வேண்டுகோள் விடுப்பார்

இது எனக்கு நடந்துள்ளது.நான் பிரதமராகயிருந்தவேளை எனது அலுவலகத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள்.அதனை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றேன்

எனது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான பெண்ணொருவரின் கணவரே அவ்வாறு பெருந்தொகை பணத்துடன் வந்தார்

உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு வெளியே போகாவிட்டால் நான் உங்களை கைதுசெய்வேன் என எச்சரித்தேன்

No comments: