News Just In

10/21/2024 04:21:00 PM

மட்டக்களப்பு கல்லடியில்,வீடு உடைத்து, பொருட்களைத்திருடிய, இளம் தம்பதிகள் கைது!

மட்டக்களப்பு கல்லடியில்,வீடு உடைத்து, பொருட்களைத்திருடிய, இளம் தம்பதிகள் கைது





மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் குற்ற தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.ரஹீம் தெரிவித்துள்ளார்.

கல்லடி திருச்செந்தூரில் அமைந்துள்ள தனது வீட்டைப் பூட்டிவிட்டு பிறந்தநாள் விழா ஒன்றிற்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டை திறந்து பார்த்தபோது, வீடு உடைக்கப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டதை, வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார்.

அலுமாரியிலிருந்த நகைகள் மற்றும் ஏ.எரி.எம் அட்டை, ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா பணம் என்பனவே திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில், வீட்டு உரிமையாளரால், முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

திருடப்பட்ட தனது ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி, பூட்-சிற்றியொன்றில், பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில், வங்கியின் குறுஞ்செய்தி வசதியூடாக, வீட்டு உரிமையாளரின் கையடக்கத் தொலைபேசிக்கு, குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

இக் குறுஞ்செய்தி தொடர்பில் ஆராய்ந்த வீட்டு உரிமையாளர், பூட்-சிற்றிக்குச் சென்று,அங்கிருந்த சி.சி.ரிவி கமராவின் பதிவுகளை அவதானித்துள்ளார்.
தனது வீட்டின், மேல் தளத்தில், வாடகைக்குக் குடியிருந்த, தம்பதிகளே பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை அவதானித்த அவர், அது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அக்கரைப்பற்றைச் சேர்ந்த தம்பதிகளைக் கைது செய்தனர். திருடப்பட்ட நகையொன்று, நகைக் கடையில் விற்பனை செய்யப்பட்டமையும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ள.சம்பவம் தொடர்பில், காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

No comments: