News Just In

10/27/2024 11:51:00 AM

பாடசாலை மாணவிகளுக்கு பேண்தகு நில முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

பாடசாலை மாணவிகளுக்கு பேண்தகு நில முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி


நூருல் ஹுதா உமர்

தரம் ஒன்பது பிரிவு மாணவிகளுக்கான பேண்தகு நில முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சுற்றுலா மற்றும் நில அமைச்சு (நில பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களம்) யினால் விவசாய துறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் ஒன்பது பிரிவு மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் நவீனமயப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிரதான வளவாளராக கல்முனை பிரதேச செயலகத்தின் காணி பயன்பாட்டு உத்தியோகத்தர் ஜ.எம். ஜவ்ஹர், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் காணி பயன்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.எச். சன்ஜிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விவசாய பாட ஆசிரியர்களான எப். றிஸ்னி முபிஸால், ஏ.எம். அஜ்மீர், டி. கோகுல வாசன் மற்றும் மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: