சமுர்த்தி வங்கியினால் சமுர்த்தி அடிப்படை அமைப்புகளுக்கு வழங்கப்படும் அருணலு கடன் தொடர்பாக அவ்வமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டுச் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுக்கு ஒருநாள் பயிற்சி பட்டறை இன்று சாய்ந்தமருது கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமை பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் நெறிப்படுத்தலில் சமுர்த்தி வங்கி சங்கம் முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
இதில் வளவாளர்களாக சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி வங்கி சங்கம் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஐ. அன்ஸார், சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எல்.எஸ்.ஹிதாயா, கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அருணலு கடன் தொடர்பாக பூரண விளக்கமளித்தனர்.
இதில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அடிப்படை அமைப்புகளின் பொருளாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதற்கான வழிகாட்டலை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
No comments: