News Just In

10/15/2024 06:04:00 PM

வாகன இறக்குமதி தொடர்பில் தமது தீர்மானத்தை வெளியிட்ட அநுர அரசாங்கம்!


வாகன இறக்குமதி தொடர்பில் தமது தீர்மானத்தை வெளியிட்ட அநுர அரசாங்கம்


நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில், வாகன இறக்குமதிக்கு அனுமதிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எந்தவொரு வகையிலும் கட்டணச் சலுகைகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது.வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வசதி செய்து தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக முன்னதாக எடுத்த அமைச்சரவை தீர்மானம் ஒன்று உள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காகக் கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பரிசீலனை செய்து, வாகன இறக்குமதி தொடர்பில் அடுத்த வருடத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.

இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் திறைசேரியின் இயலுமை என்பன குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

வாகன இறக்குமதியை ஒரு சரியான முறைக்கு உட்பட்டு, நாட்டில் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில், வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்ய, அந்த வாய்ப்பை வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: