மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் சூரியன் சின்னத்தின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது
மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் துண்டுப் பிரசுரங்களுடன் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தல் சட்டத்தை மீறி ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள சுவர்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு மேற்படி இருவரும் சுவரெட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காத்தான்குடிப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்
No comments: