News Just In

10/21/2024 10:38:00 AM

பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு - ஜனாதிபதி அநுர அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு - ஜனாதிபதி அநுர அறிவிப்பு




தூய்மையான இலங்கை என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதயில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுற்றுச் சூழலை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளன. அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிறுத்தப்பட்டுள்ள விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு உரிய முறையில் விசாரணை செய்யப்படும்.

அதேநேரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை தூய்மைப்படுத்தும் தினமாகும்.

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படும்.

அதேநேரம், அடுத்த மார்ச் மாதத்திற்குள் புதிய வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும். அதில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், கிராமத்தில் உள்ள மக்களை வறுமையில் இருந்து மீட்பதற்காக விசேட நடவடிக்கைகள் பாதீட்டின் ஊடாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

No comments: