News Just In

10/23/2024 09:01:00 PM

காலத்திற்கு ஏற்றகதை!



சிவனிடம் சில நாய்கள் முறைப்பாடு ஒன்றை முன் வைத்தன. 

''தங்களை யாரும் மதிப்பது இல்லை, எங்கே போனாலும் தங்களை எல்லாரும் 'அடிக்' என்பதும் 'கல்லால் எறிந்து துரத்துவது' மட்டுமல்லாமல் இந்த மனிதர்கள் எங்கள் உரிமைகளை அவமானம் செய்கின்றனர். நாங்கள் அவர்களை வீட்டில் அவர்களைமட்டுமின்றி  , அவர்களின் உடைமைகளையும் பாதுகாத்து வந்தும் பலன் எதுவும் இல்லை'' என்றன. 

சிவன் அவர்களிடம் சொன்னார் 

'நீங்கள் எல்லாரும் நாளை வாருங்கள்' என்று. 

அதற்கு சம்மதித்து, நாய்கள் மறுநாள் சென்றன. 

அங்கே பெரிய குவியல் சோறு இறைச்சியுடன் குழைத்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவன் அவர்களிடம், 'முதலில் சாப்பாட்டினை சாப்பிடுங்கள் பின் பேசலாம் ' என்றார். 

நாய்கள் சாப்பிட சென்றன. அங்கே, அவைகள் சாப்பிடுவதற்குப் பதிலாக ஒன்றுக்கொன்று பெரும் சண்டை பிடித்து, கடிபட்டன. அவை சோற்று குவியலில் விழுந்து சண்டை செய்தன. சாப்பிட முடியாமலும் சோறும் இல்லாமலும் போக சிவனிடம் அவை மீண்டும் சென்றன.

சாப்பாடு எப்படி இருந்தது? எல்லாரும் சப்பிட்டீர்களா?, என்று சிவன் கேட்டார்

'நாங்கள் எங்கே சாப்பிட்டோம்..? எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் சோறு எல்லாம் சிதறி  விட்டது' என்றன.

இதனால்தான் உங்களை யாரும் மதிப்பது இல்லை. உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியாத நீங்கள் எப்படி உங்கள் இனத்தின் பிரச்சினையை தீர்க்க வெளிக்கிட்டீர்கள்..? போங்க போங்க போய் உங்கள் வேலையை பாருங்கள்' என்றார், சிவன்

No comments: