News Just In

10/23/2024 01:47:00 PM

தாக்குதல் அச்சம்; இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த ஐக்கிய இராச்சியம்!

தாக்குதல் அச்சம்; இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த ஐக்கிய இராச்சியம்!




அறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் புதுப்பித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு, அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவித்தல் வரும் வரை அறுகம் வளைகுடா பகுதிக்கு செல்வத‍ை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான தமது நாட்டு பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

No comments: