News Just In

10/27/2024 08:43:00 AM

தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை கைது !

தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை கைது!




யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை குறித்த கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் கைதானதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்போது, மீன்பிடிப் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

No comments: