News Just In

9/06/2024 01:50:00 PM

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்கும் வகையில் பொத்துவில் பாணமையில் காரியாலயம்!

பொத்துவில் பாணம பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்கும் வகையில் தேர்தல் செயற்பாட்டு காரியாலயம் திறந்து வைப்பு!


(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பறை மாவட்டத்தின் பொத்துவில் தேர்தல் தொகுதியிலுள்ள பாணம பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின்வெற்றியை உறுதி செய்யும் வகையில் "இயலும் ஸ்ரீ லங்கா" பாணமை பிரதேச தேர்தல் செயற்பாட்டு காரியாலயம் திறக்கும் நிகழ்வும், மக்கள் சந்திப்பும் ஐக்கிய தேசியக் கட்சியின் வலய அமைப்பாளர் லலித் குலநாயக்க அவர்களின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை அவர்களினால் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன் விஷேட உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.

இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் நிபுன சொய்சா, லாஹுகல பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சமரக்கோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: