News Just In

9/15/2024 05:19:00 AM

மட்டக்களப்பில் ஹக்கீமின் கூட்டத்தில் கல்வீச்சு: பிரசார களத்தில் குழப்பநிலை!



ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு  ஆதரவு தெரிவித்து ஸ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் (rauf hakeem) மேடையில் உரையாற்றி கொண்டிருந்த போது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது, மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, ரவூப் ஹக்கீம் உரையாற்றும் வேளை திடீரென கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் ஹக்கீமின் பாதுகாப்பிற்காக அவரைச் சுற்றி சூழ்ந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், ஹக்கீம் தனது உரையை மிக சுருக்கமாக முடித்து கொண்டுள்ளார்.
அதேவேளை, கடந்த 23ஆம் திகதி அக்குறணையில் நடந்த பிரசார கூட்டத்திலும் ஹக்கீமிற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments: