News Just In

9/01/2024 04:28:00 PM

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சி முக்கிய தீர்மானம் எடுக்குமா இன்று?




தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் கூடியுள்ளது.

குறித்த கூட்டமானது, வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வருகைத் தரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் (R. Shanakyan), த.கலையரசன், எஸ்.குகதாசன் (Kuagadhasan), எம்.எ.சுமந்திரன் (M.A Sumanthiran), சட்டத்தரணி கே.வி. தவராசா, கே.சிவஞானம், செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்தி 
தமிழரசு கட்சி    சஜித்அணிக்கு  ஆதரவாம், மத்திய குழு உறுப்பினர்கள்முடிவு 










No comments: