சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்தின் வெற்றிக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆயத்தம் !
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் குழுக்களின் கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம் மன்சூர் தலைமையில் இன்று சம்மாந்துறை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளருமான ஏ.சீ. சமால்டீன், உயர்பீட உறுப்பினரும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், உயர்பீட உறுப்பினர் அஸீஸ், மத்திய குழு செயலாளர் அசாருதீன், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நழீம், சம்மாந்து இளைஞர் அமைப்பாளர் அர்சாத் இஸ்மாயில், கிளை தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது தபால் மூலம் வாக்களிக்க உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் விசேட கடிதத்தை வழங்குதல், ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், வட்டார ரீதியான கருத்தரங்குகள், வட்டார ரீதியான காரியாலங்கள் திறத்தல், வட்டார ரீதியான வீடு வீடாகச் செல்லும் செயற்பாடுகளை முன்னெடுத்தல், சம்மாந்துறை பிரதேசத்தில் இதுவரைக்கும் புணரமைக்க படாமல் உள்ள கிளைகள், இளைஞர் கிளைகள், மகளிர் கிளைகளையும் புனரமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

No comments: